பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன்தானே.” (அப்பர்) “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மினனே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.” (சுந்தரர்) “இழவாடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி விழவாடி ஆவி விடாமுன்னம் - மழபாடி ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை.” (ஐயடிகள் காடவர்கோன்) -“விரும்பிநிதம் பொன்னுங் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை மன்னு மழபாடி வச்சிரமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. வச்சிரதம்பேசுவரர் திருக்கோயில் திருமழபாடி & அஞ்சல் ( THIRUMALAVADI) 621 851 அரியலூர் வட்டம் - பெரம்பலூர் மாவட்டம். |