நடைபெறுகின்றது. அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் இங்கு எழுந்தருள்வதும், திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவுக்கு இங்கிருந்து நந்தி தேவர் புறப்பட்டுச் செல்லும் மரபாக இருந்து வருகின்றது. இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சுவாமி சந்நிதியில் மூன்று குழிகள் போலவுள்ளன. இதை நவக்கிரகமாக எண்ணி வழிபடுகின்றனர். சோழர், பாண்டிய காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து அரசர்களும் அரசியர்களும் ஆலயத்திற்குத் தந்த பல்வேறு நிபந்தங்கள் தெரிய வருகின்றன. இக்கோயில் எண்ணற்ற கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது. கோயிற் சுவர்களில் முதற் பராந்தகன் - முதலாம் இராசராசன் - முதலாம் இராசேந்திரன் - முதலாம் இராசாதிராசன் - இரண்டாம் இராசேந்திரன் - முதற்குலோத்துங்கன் - விக்ரம சோழன் - இரண்டாம் குலோத்துங்கன் - மூன்றாம் குலோத்துங்கன் - சடைய வர்மன் சுந்தரபாண்டியன் - ஒய் சளமன்னன் வீரசோமேசுவரன் ஆகியோரது கல்வெட்டுக்கள் உள்ளன. 10 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இவர்களால் இக்கோயில் பல பணிகளைப் பெற்றுள்ளது. விளக்கெரிக்க ஆடுகள் தந்தமை - கோயில் விமானம் புதுப்பித்தமை - திருவமுதுக்கு நிலம் தந்தது - நந்தவனம் அமைத்தது - கமுகந்தோட்டம் தந்தது - திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவர ஏற்பாடு செய்து அதற்கென நிலம் ஒதுக்கியது போன்ற அரிய செய்திகள் இக்கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றன. மாசி மகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. அப்பர் அருள் நெறி மன்றம் - இத்தலத்தில் தெய்வப் பணிகளில் ஈடுபட்டுச் செயற்பட்டு வருகிறது. திருமழபாடித் தமிழ்ச்சங்கம் தல வரலாற்றை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள வரலாறு கல்வெட்டுச் செய்திகள் நன்றியுடன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. “சந்தவார் குழலாளுமை தன்னொரு கூறுடை எந்தையானி மையாத முக்கண்ணினன் எம்பிரான் மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச் சிந்தியா யெழுவார் வினையாயின தேயுமே.” (சம்பந்தர்) “ஆலாம் உண்டுகந்த ஆதிகண்டாய் அடையவர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய் காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க் கருள் செய்த காளைகண்டாய் |