“தக்கை தண்ணுமைதாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி கொக்கரை குடமுழவினோடு இசைகூடப் பாடி நின்றாடுவீர் பக்கமே குயில்பாடுஞ் சோலைப் பைஞ்ஞீலியேயென்று நிற்றிரால் அக்குமாமையும் பூண்டிரோ சொலும் ஆரணியவிடங்கரே.” (சுந்தரர்) -மானைப்போன் மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவிதிருப் பைஞ்ஞீலிமேவும் பரம்பரமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி.நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி - அஞ்சல் - 621 005 திருச்சி வட்டம்-மாவட்டம். 116/62. திருப்பாச்சிலாச்சிராமம் திருவாசி | சோழநாட்டு (வடகரை)த் தலம். திருச்சி-சேலம் பேருந்துச் சாலையில் உள்ளது. (12 கி.மீ. தொலைவு) “பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற பெயர் பெற்றது. திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது. சுந்தரர் பொன்பெற்ற தலம். பிரமன், லட்சுமி, உமாதேவி வழிபட்டது. கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த ‘முயலகன்’ நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில் முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. (சர்ப்ப நடன மூர்த்தி) (‘முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்) இறைவன் - 1) மாற்றறிவரதர் (சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான்) 2) சமீவனேஸ்வரர், (வன்னிசூழ்ந்த வனத்தில் உள்ளவர்) 3) பிரமபுரீசுவரர், (பிரமன் வழிபட்டவர்) |