பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 405


    ஊர்நடுவில் கோயில் உள்ளது. ஞீலிவனம், கதலிவனம், அரம்பை
வனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி மேலைச் சிதம்பரம்
முதலியன தலத்திற்கு வேறுபெயர்கள்.

    இறைவன் - நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர்,
             
 ஆரண்யவிடங்கர் முதலிய பல பெயர்கள்.
     இறைவி - விசாலாட்சி
     தலமரம் - ஞீலிவாழை
     தீர்த்தம் - அப்பர் தீர்த்தம்
    மூவர் பாடல் பெற்றது.

    கிழக்கு நோக்கிய கோபுரம். மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால்
ஆனவை. இவ்வகைக் கற்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனால்தான்
இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றது போலும். இரண்டாங்
கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த
இடமான - கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது. பல்லவர் கால
அமைப்புடையது. இப்பெருமான் “சோறுடையீசுவரர்” என்றழைக்கப்படுகிறார்.
அர்த்த மண்டபத்தில் வசிட்ட முனிவருக்கு நடராசப் பெருமான் நடனக்
காட்சியருளிய இடம் உள்ளது. இதனால் இத் தலம் மேலைச்சிதம்பரம்
என்னும் பெயர் பெறுகின்றது.

    அம்பாள் சந்நிதி இரண்டு உள்ளன. பிரதான சந்நிதி சுவாமிக்கு
இடப்பால் கிழக்கு நோக்கியுள்ளது. பழைய சந்நிதி தெற்கு நோக்கியது.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் “பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி
உடையார்” என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார். இத்தலத்திற்கு
மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.

     “தூயவன் தூயவெண்ணீறு மேனிமேல்
      பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா
      மேயவன் வேய்புரை தோளி பாகமா
      ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ
                                         (சம்பந்தர்)
      “மத்த மாமலர் சூடிய மைந்தனார்
       சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
       பத்தர்தாம் தொழுதேத்து பைஞ்ஞீலியெம்
       அத்தனைத் தொழவல்லவர் நல்லரே.”         (அப்பர்)