திருப்புகழ் நாடித் தேடித் - தொழுவார்பால் நானத் தாகத் - திரிவேனோ மாடக் கூடற் - பதிஞான வாழ்வைச்சேரத் - தருவாயே பாடற் காதற் - புரிவோனே பாலைத் தேனொத் - தருள்வோனே ஆடற் றோகைக் - கினியோனே ஆனைக்கா விற் பெருமாளே -நாற்றிசையும் தேனைக்காவுண் மலர்கள் தேங்கடலென்றாக்குவிக்கும் ஆனைக்கா மேவி யமர் அற்புதமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா & அஞ்சல் - திருச்சி - 620 005. திருச்சி வட்டம் & மாவட்டம். சோழநாட்டு (வடகரை)த் தலம். திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்ச நல்லூர் வழியாக இத்தலத்தையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். ஞீலி - இது ஒருவகை வாழை. தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை காய் கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர் பயன்படுத்தினால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள். அந்தணர் வடிவில் இறைவன் வந்து அப்பர் பெருமானுக்குப் பொதி சோறளித்துப் பசியைப் போக்கிய தலம். உமாதேவி வழிப்பட்டது. |