முக்கியமான ஒரு பணியாகும். அண்மையில் 12-7-2000-ல் மஹா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்றுக் கவிமழை பெய்யத் தொடங்கிய காளமேகப் புலவர் ஆனைக்கா உலா மற்றும் தனிப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார். சைவ எல்லப்ப நாவலர், கச்சியப்ப முனிவர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலிய பெருமக்கள் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். ‘தாரமாய மாதராள் தானொர் பாகமானினான் ஈரமாய புன்சடை யேற்ற திங்கள் சூடினான் ஆரமாய மார்புடை யானைக்கா விலண்ணலை வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.” (சம்பந்தர்) “துன்ப மின்றித் துயரின்றி என்றுநீர் இன்பம் வேண்டில் இராப் பகல் ஏத்துமின் என்பொன் ஈசன் இறைவன் என்றுள் குவார்க்(கு) அன்பனா யிடும் ஆனைக்கா அண்ணலே." (அப்பர்) “வலங்கொள்வார் அவர்தங்கள் வல்வினை தீர்க்கு மருந்து கலங்கக் காலனைக் காலாற் காமனைக் கண்சிவப்பானை அலங்கல் நீர்பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும் இலங்க சேவடி சேர்வார் எம்மையு மாளுடையாரே." (சுந்தரர்) “குழீஇயிருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம்-தழீஇயிருந்தும் என்னானைக்காவா இதுதகா தென்னாமுன் தென்னானைக் காஅடைநீ சென்று.” (ஐயடிகள் காடவர்கோன்) “ஏரானைக் காவிலுறை என்னானைக் கன்றளித்த போரானைக் கன்றதனைப் போற்றினால் - வாராத புத்தி வரும் பத்தி வரும் புத்திர உற்பத்தி வரும் சக்தி வரும் சித்தி வருந்தான்.” (காளமேகம்) |