“காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு” என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர். கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபும் வழக்கமுமாகும். ‘நாடிவந்து நமன்தமர் நல்லிருள் கூடிவந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை வாடியேத்த நம் வாட்டந்தவிருமே.’ (அப்பர்) பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமதானசற் குணர்நேயா ஒப்பிலாமாமணிக் கிரிவாசா வித்தகாஞானசத் திநிபாதா வெற்றிவேலாயுதப்பெருமாளே (திருப்புகழ்) -ஒங்காது “நாட்போக்கி நிற்கும் நவையுடையார் நாடரிதாம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே” (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. ரத்னகீரீஸ்வரர் திருக்கோயில் (வாட்போக்கி) ஐயர்மலை சிவாயம் அஞ்சல் - 639 124 (வழி) வைகநல்லூர் திருச்சி மாவட்டம். |