பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 415


                                      -கோட் போக்கி
    நில் லுங்கடம்ப நெறிபோல் எனப்பூவை
    சொல்லுங் கடம்பந்துறை நிறைவே.          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    
அ/மி. கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
     குளித்தலை & அஞ்சல்.
     கரூர் மாவட்டம் 639 104.

120/3. திருப்பராய்த்துறை

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    திருச்சி- ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது. எலமனூர் புகைவண்டி
நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். திருச்சியிலிருந்து கரூர், குளித்தலை
செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.

    பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம்
‘பராய்த்துறை’ எனப்படுகிறது. காவிரிக் கரைத் தலம். இத்தலத்திற்குத்
‘தாருகாவனம்’ என்று பெயர். (பராய் மரம், சமஸ்கிருதத்தில் ‘தாருகா
விருக்ஷம்’ எனப்படும்.)

    இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின்
செருக்கை அகற்றி அவர்க்கு அருள்புரிந்த சிறப்பையுடைய தலம். இந்திரன்,
குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

    இறைவன் - தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
    இறைவி - ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்
    தலமரம் - பராய் மரம் (பிராகாரத்தில் உள்ளது.)
    
தீர்த்தம் - காவிரி

    
சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற பதி.