இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் ஆளுகைக்குட்பட்டதாகும். இத்தலத்துப் பெருமான்மீது மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் “கற்குடிமாமலை மாலை” என்னும் நூலைப் பாடியுள்ளார். இந்நூல் 100 தோத்திரப் பாடல்களை உடையது. இத்தலத்திற்குப் பக்கத்தில் ‘வயலூர்’ முருகன் கோயில் உள்ளது. “வடந்திகழ் மென்முலை யாளைப் பாகமதாக மதித்துத் தடந்திரை சேர்புனன் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பமது எல்லாம் கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலை யாரே.” (சம்பந்தர்) “வானவனை வானவர்க்கு மேலனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவிப்புக்க தேனவனைத் தேவர் தொழு கழலான் தன்னைச் செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் கோனவனைக் கொல்லை விடையேற்றினானைக் குழல் முழவம் இயம்பக் கூத்தாட வல்ல கானவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.” (அப்பர்) “மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற இறைவா எம் பெருமான் எனக்கு இன்னமுது ஆயவனே கறையார் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே” (சுந்தரர்) “செயிரறு நினது திருவருள் காட்டுந் திறத்தினாற் காண்பதை யன்றிப் பயிறரு கேள்வி யானின்னைப் பளகறக் காணவும் படுமோ வயிரமா மலைச் செம்மணிக்கு வால் பச்சை மணிக்கு வாலொடு பிறங்கிடுதல் கயிலை நீ உமையோடி ருப்பது தெரிக்குங் கற்குடி மாமலைப் பரனே.” (கற்குடி மாமலை மாலை) - கூழும்பல் “நற்குடியும் ஓங்கி நலம் பெருகு மேன்மை திருக் கற்குடியிற் சந்தான கற்பகமே.” (அருட்பா) |