பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 447


     இறைவன் - வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்,
               தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர்,
               அனந்தேஸ்வரர், நாகேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.
     இறைவி - உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி,
                            சுகந்தகுந்தளாம்பிகை
     தலமரம் - சண்பகம். தற்போது இல்லை.

     தீர்த்தம் - சூல தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது. இதற்குச் சக்கர
தீர்த்தம் என்றும் பெயர். இது பாவம் போக்கவல்ல சிறப்புடையது. மிகப்
பெரிய குளம் - நல்ல படித்துறைகளுடன் உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

     சாலையோரத்தில் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. சுற்று
மதில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில்
மட்டுமே. துவாரகணபதியும் மறுபுறம் தண்டபாணியும் தரிசனம். உள்
நுழைந்தால் முன்மண்டபம்.

     மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத்
தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. எதிரில்
இத்திருக்கோயிலை 1926ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம்
ராம.கு.ராம.இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கை
குவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

    கொடிமரம் கருங்கல்லால் ஆனது. முன்னால் ‘திருநீற்றுக்கோயில்’
அமைக்கப்பட்டுள்ளது. இத்துவாரத்துள்ளிருந்து திருநீறு எடுத்து அணிந்து
கொள்ளலாம். உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. வலப்பால் அம்பாள்
(மங்களேஸ்வரி) சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. சந்நிதிக்கு முன்னால்
செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு வெளியே
எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளுக்குரிய உருவங்கள்
உரிய கட்டமைப்பில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

    குருபகவான் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. அடுத்துத் துவார
விநாயகரும் மறுபுறம் கந்தக் கடவுளும் காட்சி தருகின்றனர். வெளிப்
பிராகாரத்தில் உள்ள படிகள் வழியாக மேலேறிச் சென்று விமானத்தைத்
தரிசிக்கலாம். எல்லா விமானங்களும் கருங்கற்களால் ஆனவையே. உள்
வாயில் நுழைந்து வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன.
அடுத்து, சிறப்பு பெற்ற சிறுவாச்சூர் காளிதேவியின் மகாமேருவும்