பக்கம் எண் :

450 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்,
               பசுபதிநாதர்.
     இறைவி - அல்லியங்கோதை, சௌந்தரநாயகி

     திருக்குளம் (தீர்த்தம்) எதிரில் உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

     மூன்று நிலைகளைக் கொண்ட சிறிய - பழைய ராஜகோபுரம் கிழக்கு
நோக்கியது. உள்சென்றால் பெரிய முன்மண்டபம். இம் மண்டபத்தின்
வடபால் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற நிலை.

    பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், அகழி
அமைப்புடைய கர்ப்பக்கிருகம். கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை
அமைப்பும் உடையது. இராமாயண வரலாற்றுச் சிற்பங்கள் அழகுறச்
சித்தரிக்கப்பட்டுள்ளன.

    கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, நேர்பின்புறத்தில்
திருமால், பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை
ஆகியோர் உளர்.

    இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி (வடக்குப் பிராகாரத்தில்)
உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில்,
எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள். வில், கதை, சூலம்,
கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும்
சிங்கமும் இருக்க ; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து
தருவதுபோலவும், தொடையைக் கிழத்து இரத்த பலி தருவது போலவும்
காட்சி தர ; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக
மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க,
துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் இக்கோயிலுக்கே தனிச்
சிறப்பைத் தருவதாகும்.

     திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று
ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும்;
இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

    சண்டேஸ்வரர், நவக்கிரக சந்நிதிகள் உள. நவக்கிரகங்களுக்கு நடுவில்
நந்தி உள்ளார். நால்வர் சந்நிதி உள்ளது. மூலவர் - பெரிய உருண்டை
வடிவமான திருவுருவம். அர்த்த மண்டபத் தூண்கள் சோழர்கால
வேலைப்பாடு உடையவை. முதற் பராந்தகன் காலத்தில்