பக்கம் எண் :

484 திருமுறைத்தலங்கள்


     “கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
      நடுநடுத்து நா அடங்கா முன்னம் - பொடியடுத்த
      பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
      கீழ்க்கோட்டஞ் செப்பிக்கிட.”
                                (ஐயடிகள் காடவர்கோன்)

                                     - மாணுற்றோர்
    காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
    கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே.        (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    
அ/மி. நாகேசுவரசுவாமி திருக்கோயில்
     கும்பகோணம் & அஞ்சல் - 612 001
    
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

145/28. குடந்தைக்காரோணம்

சோமேசர் திருக்கோயில்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ள
கோயில். மக்கள் ‘சோமேசர் கோயில்’ என்று வழங்குகின்றனர். மகாசங்கார
காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம்
காரோணம் எனப்படும். இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை
ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று.

     (மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள ‘காசி விசுவேசம்’ என்னும்
கோயிலைக் குடந்தைக் காரோணம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில்
இராமன், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில்
ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம்
என்று இஃது பெயர் பெற்றாலுங்கூட ; திருஞானசம்பந்தர் பாடலில்