பக்கம் எண் :

486 திருமுறைத்தலங்கள்


    தேரோண மட்டுந் திகழ் குடந்தை மட்டுமன்றிக்
    காரோண மட்டுங் கமழ் மலரே.     (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. சோமசர் திருக்கோயில்
    கும்பகோணம் & அஞ்சல் - 612 001
    கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

146/29. திருநாகேச்சுரம்

திருநாகேஸ்வரம்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ளது. நகரப்பேருந்து அடிக்கடி
செல்கிறது. சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும்
நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு
கோயிலைக் கட்டினார்.

    ராகு கிரகத்திற்குரிய தலம். ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன்
முதலிய நாகராஜாக்களும், கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்
முதலியோரும் வழிபட்டது. சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு
பெயர்கள். பெரிய கோயில் - நான்கு கோபுர வாயில்கள்.

    (காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம்,
மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம்
என்பர்.)

    இறைவன் - நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்

    இறைவி - கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை
    
தலமரம் - சண்பகம்
    
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் (மூன்றாம் பிராகாரத்தில் உள்ளது)
    தலவிநாயகர் - சண்பகவிநாயகர்

    மூவர் பாடல் பெற்றது.