மண்டபம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சிவலிங்கம், அம்பாள், சுக்ரீவன் அமைத்த சந்நிதி, விசுவநாதர், மயில்வாகனர், கஜலட்சுமி, நடராசர் சந்நிதி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோர் காட்சி தருகின்றனர். அடுத்துள்ள மண்டபத்தில் செல்லும்போது மேலே முகப்பில் சுக்ரீவன் பெருமானை வழிபடுவதும், பக்கத்தில் ரிஷபாரூடராய்க் காட்சி தருவதும் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. நேரே மூலவர் தரிசனம். திருமுறைக்கோயில் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள துர்க்கைக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சுவாமி கருவறை அகழியமைப்புடையது. நாடொறும் நான்கு கால பூசைகள். சோழ, பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இத்தலம் “தென்கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை” ; “பூபாலகுலவல்லி வளநாட்டு திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை” எனக் குறிக்கப்படுகின்றது ; சுவாமியைத் ‘திருக்குரங்காடுதுறை மாதேவர்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. “பரவக்கெடும் வல்வினை யாரிடஞ்சூழ இரவிற்புறங் காட்டிடை நின்றெரியாடு அரவச்சடை யந்தணன் மேய அழகார் குரவப்பொழில் சூழ்குரங்கா டுதுறையே” (சம்பந்தர்) “நற்றவஞ்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழியால் அருள்செய்த நல் கொற்றவன் குரங்காடு துறை தொழப் பற்றுந் தீவினையாயின பாறுமே.” (அப்பர்) - ‘நீக்கமிலா நன்குரங்காணு நடையோரடைகின்ற தென்குரங் காடுதுறைச் செம்மலே.’ (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஆடுதுறை & அஞ்சல் - 612 101 திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம். |