- யோகையுளந் தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப் போக்கும் இடைமருதிற் பூரணமே (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிடைமருதூர் & அஞ்சல் - 612 104 திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம். 148/31. தென்குரங்காடுதுறை ஆடுதுறை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் இன்று ‘ஆடுதுறை’ என்று வழங்குகின்றனர். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள தலம். தென்னலக் குடி (திருநீலக்குடி) யிலிருந்தும் பாதை செல்கிறது. 3 கி.மீ. தொலைவு. ஆடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் சென்றால் சாலையோரத்தில் குளம் வருகிறது. அங்கு இடப்புறமாகத் திரும்பிச் (குளத்தையொட்டிச் செல்லும்) சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் கோடியில் திருக்கோயில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதலம். கண்டராதித்தன் மனைவியார் கட்டிய கற்றளி. இறைவன் - ஆபத்சகாயேஸ்வரர் இறைவி - பவளக்கொடியம்மை சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது. முன் மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது. மறுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும், இடப்பால் மூத்தபிள்ளையார் காட்சிதருகிறார். சற்று உள்ளடங்கிப் புராண |