பக்கம் எண் :

496 திருமுறைத்தலங்கள்


                                     - புன் குரம்பை
    ஏலக்குடி புகுந்த எம்மனோர்க்கு உண்மைதரு
    நீலக்குடி விலங்கு நிஷ்களமே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில்
    திருநீலக்குடி & அஞ்சல் - (வழி) கும்பகோணம்
    திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம் - 612 108.

150/33. வைகல் மாடக் கோயில்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    ஊர் - வைகல். கோயில் - மாடக்கோயில். கும்பகோணத்திலிருந்து
காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர்
கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில்
திரும்பி, “நாட்டார் வாய்க்காலைக் கடந்து, பழியஞ்சிய நல்லூரை அடைந்து,
மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம்.
‘நாட்டார் வாய்க்கால்’ மீது உள்ள பாலம் குறுகலானது. ஆதலின் பேருந்து
செல்லாது - நடந்தே செல்ல வேண்டும். இத்தலத்தில் மூன்று கோயில்கள்
உள்ளன :-

     1) விசுவநாதர் ஆலயம் :- ஊரின் தென்பால் உள்ளது. ‘வளநகர்’
என்று இப்பகுதி வழங்குகிறது. (திருமால் வழிபட்டது.)

     
2) பிரமபுரீசுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில்.
(பிரமன் வழிபட்டது)

     
3) வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். பாடல்
      பெற்றது.

     இறைவன் - சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்
     இறைவி - சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை,
                      
வைகலாம்பிகை.
     தலமரம் - சண்பகம். (தற்போதில்லை)