எந்தையே வருகஎனை ஈன்றதா யேவருக என்கண்மணி வருகவருக எண்ணனந் தங்கோடி மன்மதா காரமாம் என்றுமிளை யோன்வருகவே மைந்தனே வருகமணி யேவருக வள்ளலே வருகவைப் பேவருகவே மாயூர நகர்மேவு கேயூர மணிபுய மயூரவா கனன்வருகவே. (சிதம்பரநாத முனிவர்) அபயாம்பிகை சதகம் கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக் காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார் இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய் நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய் மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே. (நல்லத்துக்குடி கிருஷ்ணசாமி ஐயர்) - வேளிமையோர் வாயூரத்தேமா மலர்சொரிந்து வாழ்த்துகின்ற மாயூரத் தன்பர் மனோரதமே. (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. மயூரநாதசுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை & அஞ்சல் 609 001 மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |