அம்பாள் நின்ற திருமேனி - அழகான திருக்கோலம். இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமானது. அங்கு காசி விசுவநாதர், விசாலாட்சி கோயிலுள்ளது. உத்தரமாயூரம் எனப்படும் வள்ளலார் கோயில் காவிரிக்கு வடகரையில் உள்ளது. இங்கு மேதாதட்சிணாமூர்த்தி, ரிஷபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக (யோகாசனத்தில் அமர்ந்து ஞான முத்திரையுடன் எழுந்தருளியுள்ளார். கடைமுழுக்கு நாளன்று (ஐப்பசி இறுதி நாள்) இங்குள்ள எல்லாக் கோயில்களிலுமுள்ள மூர்த்திகளும் உலாவாக எழுந்தருளி வந்து மயூரநாரதரோடு தீர்த்தம் கொடுக்கும் சிறப்பு, மிகவும் விசேஷமான திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசிப் பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும் வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்பாக நடை பெறுகின்றன. நாடொறும் ஆறுகால வழிபாடுகள். கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணமும், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் என்பவரும் அபயாம்பிகை சதகம் பாடியுள்ளார். கல்வெட்டில் இத்தலத் திறைவன் ‘மயிலாடுதுறை உடையார்’ என்று குறிக்கப் பெறுகின்றார். ‘ஊனத்திருள் நீங்கிடவேண்டில் ஞானப்பொருள் கொண்டடியேனும் தேனொத்தினியான மருஞ்சேர் வானம் மயிலாடுதுறையே’ (சம்பந்தர்) ‘குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால் கறைநிலாவிய கண்டன் எண்தோளினன் மறைவலான் மயிலாடுதுறை யுறை இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே.’ (அப்பர்) க்ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் ஐந்தரு வெனுங்கற்ப கச்சோலை வருகஅறி வானந்த வெள்ளம் வருக அனந்தகல் யாணமே ருகிரி வருகவே அங்கையா மலகம்வருக சிந்தையில் மகோதயஞ் செய்திருளை நீக்கிடும் சிவஞான பானுவருக செனனவெப் பந்தணிக் குங்கோடி மதிவருக தித்திக்கு மமுதம்வருக |