பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 513


     ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     (ஆவடுதுறையில் உலவாக்கிழி பெற்ற ஞானசம்பந்தர் அங்கிருந்தும்
போந்து வழிபட்ட தலங்களுள் இஃதும் ஒன்று. திருத்துருத்தி வழிபட்டுப்
பின்பு இங்குவந்து தொழுது, திருவிளநகர் சென்றார். கோலக்கா வரை வந்து
ஞானசம்பந்தர் வழியனுப்ப அப்பர் சோழநாட்டுத் தலயாத்திரையைத்
தொடங்கியபோது திருச்செம்பொன்பள்ளி தொழுத பின்பு இங்கு வந்தார்.

     இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. இங்கு உள்ள
முருகன் சந்நிதி - குமரக்கட்டளை மட்டும் தருமையாதீனத்திற்குரியது.
மிகப்பெரிய கோயில். ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான
சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று
நிலைகளையுடையது. ராஜ கோபுரத்துள் நுழைந்ததும் இடப்பால் திருக்குளம்.
வலப்பால் குமரக்கட்டளை அலுவலகம்.

     பிராகாரத்தில் இடப்பால் குமரக்கட்டளைக்குரிய (தருமையா
தீனத்திற்குரிய தான) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மண்டபத்தில்
இருபுறமும் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மண்டபத்தில் இரு
கொடிமரங்கள் உள. நேரே பார்த்தால் சுவாமி சந்நிதி தெரிகிறது. வாயிலை
தாாண்டிச் சென்றால் உட்சுற்றில் இடப்பால் சந்திரன், மயிலம்மை
சந்நிதிகளும்; வலப்பால் உற்சவ மூர்த்தங்களின் பாதுகாப்பறையும், இடப்பால்
நால்வர், சப்த மாதாக்களைத் தொடர்ந்து அறுபத்துமூவர் உற்சவத்
திருமேனிகளும், இந்திரன், அக்கினி, எமன், நிருதி ஆகியோர் வழிபட்ட
இலிங்கங்களும், மகாவிஷ்ணுவும், வருணன், வாயு வழிபட்ட லிங்கங்களும்,
மகாலட்சுமியும், அஷ்டலட்சுமியும் நமக்குக் காட்சி தருகின்றனர்.
திருமுறைக்கோயில் தனிச் சந்நிதியாகவுள்ளது. நடராச சபையில் உள்ள
அம்பலவர் திருமேனி மிகவும் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
அருணாசலேஸ்வரர், நவக்கிரக சந்நிதி, சனிபகவான், சூரியன் ஆகியோரை
வழிபட்டு மேலே சென்று துவார பாலகரைத் தொழுது உட்சென்றால்
மூலவர் தரிசனம்.

     கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, ஜ்வரதேவர், ஆலிங்கன சந்திர
சேகரர், தட்சிணாமூர்த்தி, பிரமன், பிட்சாடனர், கங்காவிசர்சனர் ஆகிய
மூர்த்தங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியாகவுள்ளது. அபயாம்பிகை
சதகப் பாடற் கல்வெட்டு உள்ளது. உள் மண்டபத்தில் அனவித்யாம்பிகை
சந்நிதியில் சிவலிங்கம் உளது. இத்திருமேனிக்குப் புடவை சார்த்தப்
பட்டுள்ளது. ஆடிப்பூர அம்மன் தரிசனம். அபயாம்பிகைக் கீர்த்தனைகளும்
கல்லிற் பதிக்கப்பட்டுள்ளன.