பக்கம் எண் :

512 திருமுறைத்தலங்கள்


                                             -வருத்துமயல்
     நாளமழுந்தூர் நவையறுக்கும் அன்பருள்ளம்
     நீளுமழுந்தூர் நிறைதடமே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
     தேரிழந்தூர் & அஞ்சல்
     மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 808.

     (மற்ற பெயர்ப்பலகைகள் எல்லாம் ‘தேரழுந்தூர்’ என்றிருக்க, அஞ்சல் நிலையப் பெயர் மட்டும் ‘தேரிழந்தூர்’ என்று மாறியுள்ளது. வியப்பாகவுள்ளது.)


156/39. மயிலாடுதுறை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     சென்னை திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில்
உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான
பல ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் ஏராளமாக வுள்ளன.
இத்தலத்தின் ஒரு பகுதியாகிய தருமபுரத்தில்தான் தருமையாதீனம் உள்ளது.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும்
முதுமொழி இதன் சிறப்பை விளக்கும். காசிக்குச் சமமான ஆறுதலங்களுள்
இதுவுமொன்று.

     அம்பாள் மயில்வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவங்
கொண்டு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இத்தலம்
கௌரி மாயூரம் என்றும் பெயர் பெறும். சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம்,
தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். இந்திரன், பிரமன்,
வியாழபகவான், அகத்தியர், சப்த மாதாக்கள், உமாதேவி ஆகியோர்
வழிபட்ட தலம்.

     இறைவன் - மயூரநாதர்
     இறைவி - அபயாம்பிகை
     தலமரம் - மா, வன்னி
     தீர்த்தம் - பிரமதீர்த்தம், காவிரி, ரிஷபதீர்த்தம்.