இத்திருக்கோயிலுக்குத் தலபுராணம் உள்ளது. இக்கோயிலுக்கு நான்கு பக்கங்களிலும் நான்கு (இறைவர்) வள்ளல்களாக வீற்றிருப்பதாகத் தலபுராணம் கூறும். அவை - மயூரநாத வள்ளல், மயிலாடுதுறையின் நடுவில் வீற்றிருக்க, கிழக்கே திருவிளநகரில் துறைகாட்டும் வள்ளல், தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், வடக்கே உத்தர மயிலாடுதுறையில் கைகாட்டும் வள்ளல் (தட்சிணாமூர்த்தி) என நால்வர் இறைவர் உள்ளனர் என்பதாகும். தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்கோயில். பூஜைகளும் வழிபாடுகளும் விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. தஞ்சை நாய்க்கர் மன்னர் அச்சுதப்ப நாய்க்கர் காலத்தில் கோயிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் இறைவன் ‘துறைக்காட்டுத் தம்பிரானார்; ‘துறைநாட்டுவான்’ எனும் பெயர்களால் குறிக்கப்படுகின்றார். உத்தமச்சோழன் மனைவி இக்கோயிலின் அர்த்த சாமக்கட்டளைக்கு நிவந்தம் வைத்த செய்தியைக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. கையிலங் கிய வேலினார் தோலினார் கதிகானார் பையிலங்கர வல் குலாள் பாகமாகிய பரமனார் மையிலங் கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்கு வெண்ணீற்றினார் மேயது விளநகரதே (சம்பந்தர்) - தேயா “வளநகர் என்றெவ்வுலகும் வாழ்த்தப்படுஞ்சீர் விளநகர் வாழ் எங்கண் விருந்தே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. உசிரவனேஸ்வரர் திருக்கோயில் திருவிளநகர் - (வழி) மன்னம்பந்தல் - 609 305 மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |