குழியில் கஞ்சி வடிந்திருக்கக் கண்டு பசிபொறாமல் அதைத் தம் கைகளால் வாரிப் பருகினார். அவ்வளவில் மணியொலித்தது. மன்னன் ஓடிவந்து செய்தியறிந்து பட்டினத்தாரை வணங்கி வரவேற்றான்.” விக்ரமசோழன் கல்வெட்டில் இத்தலம் “இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம்” என்றும்; சுவாமி “வலம்புரி உடையார்” என்றும் ; அம்பாள் “தடங்கண் நாச்சியார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுச் செய்தி ஒன்று “பண்டைநாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததாகத்” தெரிவிக்கின்றது. “கொடியுடை மும்மதிலூடுருவக் குனிவெஞ்சிலை தாங்கி இடிபட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தாரிடம் போலும் வடிவுடைமேதி வயல் படியும் வலம் புர நன்னகரே.” (சம்பந்தர்) “நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்ட புன்சடையினானே அனைத்துடன் கொண்டு வந்து அன்பினால் அமைய ஆட்டிப் புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன் எனக்கு நான் செய்வ தென்னே இனிவலம் புரவனீரே. (அப்பர்) “எனக்கினித் தினைத் தனைப் புகலிடம் அறிந்தேன் பனைக்கனி பழம் படும் பரவையின் கரைமேல் எனக்கினியவன் தமர்க்கினியவன் எழுமையும் மனக்கினியவன் தனதிடம் வலம்புரமே.” (சுந்தரர்) - எள்ளுறுநோய் ஏயவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் மேயவலம் புரத்து மேதகவே. (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. வலம்புரநாதர் திருக்கோயில் மேலப் பெரும் பள்ளம் - மேலையூர் அஞ்சல் மயிலாடுதுறை RMS - 609 107 தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |