பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 527


     பேருந்தில் மேலையூர் சென்று அங்கிருந்தும்; இத் தலத்தையடையலாம்.
திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கினைப் பெற்றதலம். ஏரண்ட முனிவர்
திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கி, இவ்வூரில் கரையேறியதாகக்
கூறப்படுகிறது. அம்முனிவருடைய கோயில் இங்குள்ளது.

     இறைவன் - வலம்புரநாதர்
     இறைவி - வடுவகிர்க்கண்ணி
     தலமரம் - பனை
     தீர்த்தம் - பிரமதீர்த்தம், லட்சுமி தீர்த்தம்.
             (கோயில் எதிரில் உள்ளது)

     மூவர் பாடல் பெற்றது.

     மாடக்கோயில், எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர்
விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட
இலிங்கமும் உள்ளன. கிழக்கு நோக்கிய கோயில். உள் பிராகாரத்தில்
சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி
சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு
நோக்கியுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் - வட்டணை நாயகர் என்று
அழைக்கப்படுகிறது. சிறப்பாகவுள்ளது. கருவறை சிற்ப வேலைப்பாடுடையது.
தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. நடராசசபை அழகாகவுள்ளது.

     மூலவர் - பிருதிவிலிங்கம். திருமுடியில் பள்ளம் உள்ளது.
சாம்பிராணித் தைலம், புனுகுசட்டம் சார்த்தப்படுகிறது. குவளை சார்த்தி
 அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் “பட்டினத்தாரை மன்னன்
வரவேற்கும் ஐதீகவிழா” என்று ஒருவிழா நடைபெறுகிறது. அது தொடர்பாகச்
சொல்லப்படும் செய்தி வருமாறு:-

     மன்னவன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத்
தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி
கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது.
நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் (சஹஸ்ர போஜனம்) அதில்
எவரேனும் மகான் ‘ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில்
உள்ள மணி ஒலிக்கும்; அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச்
சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்வித்தான். பட்டினத்தார்
ஒரு நாள் அங்கு வந்தார். உணவிடுதலை யறிந்து அவ்விடம் சென்றார்.
அங்கிருந்தோர் அவரைப் பின்புறமாக வருமாறு சொல்ல அவரும் அவ்வாறே
சென்றார். சென்றவர் அங்குக்