பக்கம் எண் :

526 திருமுறைத்தலங்கள்


     “புலர்ந்தகால் பூவுநீருங் கொண்டடி போற்ற மாட்டா
     வலஞ்செய்து வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த
     சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருளவல்லார்
     நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.”
                                               (அப்பர்)

     “ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கரிய
     சோதியன் சொற் பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும்
     ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
     நாதியன் நம் பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே.”
                                               (சுந்தரர்)

                         - இன்புள்ளித்
     தெள்ளியார் போற்றுத் திகழும் திருநன்னிப்
     பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. நற்றுணையப்பர் திருக்கோயில்
     புஞ்சை - கிடாரங்கொண்டான் அஞ்சல்
     (மாயவரம்) கீழையூர் S.O. - 609 304
     மயிலாடுதுறை RMS - மயிலாடுதுறை வட்டம்
     நாகப்பட்டினம் மாவட்டம்.

161/44. திருவலம்புரம்

மேலப்பெரும்பள்ளம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் ‘மேலப் பெரும்பள்ளம்’ என்று வழங்குகின்றனர். பூம்புகாருக்கு
அதைச்சுற்றிய அகழியாக இவ்வூர் முற்காலத்திருந்தமையின் இஃது
பெரும்பள்ளம் என்று பெயர் பெற்றது. கீழ்ப்புறமுள்ளது கீழப்பெரும் பள்ளம்
என்றும் மேற்புறமுள்ளது மேலப் பெரும்பள்ளமென்றும் பெயர் வரலாயிற்று.
காவிரிக்கு வலப்புறமிருப்பதால் வலம்புரம் என்றாயிற்று.

     (1) மயிலாடுதுறை பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக
அணையை அடைந்து; அங்கிருந்தும், (2) சீகாழி - காவிரிப்பூம்பட்டினம்