பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 591


    “வானுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
     கானிடை ஆடலாள் பயில் கருக்குடிக்
     கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
     வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.” 
                                          (சம்பந்தர்)

                                     - “செப்பமுடன்
     ஓங்குந்திருத் தொண்டருள்குளிர நல்லருளால்
     தாங்குங்கருக் குடிவாழ் சங்கரனே.”          (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. சற்குணலிங்கேசுவரர் திருக்கோயில்
     மருதாந்த நல்லூர் & அஞ்சல்
     திப்பிராஜபுரம். S.O. 612 402
     கும்பகோணம் R.M.S.
     தஞ்சை மாவட்டம்.

187/70. ஸ்ரீவாஞ்சியம் -
திருவாஞ்சியம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1. நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.