பக்கம் எண் :

646 திருமுறைத்தலங்கள்


     ஆரூரன் சந்நிதிபோல் ஆரூரன் ஆலயம்போல்
     ஆரூரன் பாதத்த ழகுபோல் - ஆரூர்
     மருவெடுத்த கஞ்சமலர் வாவிபோல் நெஞ்சே
     ஒரு இடத்தில் உண்டோ உரை.    (தனிப்பாடல்)

                                      - தக்கநெடும்
     தேரூர் அணிவீதிச் சீரூர் மணிமாட
     ஆரூரில் எங்கள் அரு மருந்தே - நீரூர்ந்த
     காரூர் பொழிலுங் கனியீந்திளைப்பகற்றும்
     ஆரூர் அரனெறி வேளாண்மையே - ஏரார்ந்த
     மண்மண்டலிகர் மருவும் ஆரூர்ப்பரவை
     யுண்மண்டலியெம் உடைமையே.”           (அருட்பா)

             க்ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்

     உன் கருணை மெய்யாட வுதயரவி யொளியாட
          உபயசரணங்களாட
     உயர்நாதமான சபை யொலியாட விந்துவாம்
          ஓங்குமிகு தண்டையாட
     மின்குலவு நவரத்ன மகரகுண்டலமாட
          மிகு கருணை வதனமாட
     வெற்றிவேல் தாங்கு செங்கையாட அருளாட
          விமல மலர் நயனமாட
     என்கண்ணி னிற்குமருள் நகையாட நுதலாட
          இட்ட வெண்ணீறாடவே
     ஏரார் விராட் புருட னாறுதானத்தே
          இலங்கு மூலாதாரமாந்
     தென்கமல நகர்மேவு தேவாதி தேவனே
          செங்கீரை யாடியருளே
     தியாகேசனுமை தவசி நடனஞ் செய்கந்தனே
          செங்கீரை யாடியருவே.

     “காளைவடி வொழிந்து கையுறவோடை யுறவாய்
     நாளும் அணுகி நலியாமுன் - பாளை
     அவிழ் கமுகம் பூஞ்சோலை ஆரூரற்காளாய்க்
     கவிழ்கமுகம் கூம்புக என் கை.” (ஐயடிகள் காடவர் கோன்)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில்
     திருவாரூர் & அஞ்சல் - 610 001
     திருவாரூர் மாவட்டம்.