கமலாம்பிகை அறந்தழையக் கலைத்தெரிவை வனப்பெய்தச் சசியெனும்பேர் அரிவை வாழ நிறங்கெழுபூ மடந்தையோடு நிலமங்கை மங்கலத்தின் நிறைந்து மல்கப் பிறங்குமுயிர்த் தொகையனைத்தும் களிகூரத் தவம்புரியும் பீடு சான்ற சிறந்தகம லாலயநா யகிசெம்பொற் சேவடிகள் சென்னி சேர்ப்பாம். அல்லியங்கோதை தொல்லைமா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச் செல்வமாண் கருணையாகுஞ் சிறகால் அணைத்துப் போற்றும் மல்லலஞ் செழுநீர் வாவி வண்கம லாலயத்துள் அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாம். திருப்புகழ் நீதானெத் தனையாலும் - நீடூழி க்ருபையாகி மாதானத் தனமான - மாஞானக் கழல்தாராய் வேதாமைத் துனவேளே - வீராசற் குணசீலா ஆதாரத் தொளியானே - ஆரூரிற் பெருமாளே. அசபாநடனப் பதிகம் நீடுசந்த் ரோதயம் போல்வதன மசையவருள் நிறைகமல நயனமசைய நின்றநதி மதியசைய வொன்றுசடை முடியசைய நிகழ்மந்த காசமசையத் தோடலர் செவந்தியந் தோடசைய மார்பில் தொடுத்தசெங் குவளையசையத் துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி சூரியர்கள் போலசையமால் தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு செம்பொன்மலை வல்லியசையச் செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன சிம்மா சனத்திருந்தே ஆடுமுன் னசபைநட மடியனென் றுங்காண அருளுவாய் தியாகேசனே அசைவில்கம லேசனே அசபா நடேசனே ஆனந்த உல்லாசனே.(ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்) |