பக்கம் எண் :

644 திருமுறைத்தலங்கள்


     “நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
     வாதியாவாதலானாளு நாளின்பமே மருவினாயே
     சாதியார் கின்னரர் தருமனும் வருணனமேத்து முக்கண்
     ஆதியாரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல்
                                               நெஞ்சே.”
                                             (சம்பந்தர்)

     “பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
     கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்
     ஓடிளவெண்பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும்
     ஆடிளம்பாம் பசைத்தானும் ஆரூரர் அமர்ந்த அம்மானே.”
                                               (அப்பர்)

     “சொல்லிடில் எல்லையில்லை சுவையிலாப் பேதைவாழ்வு
     நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தேனல்லேன்
     மல்லிகைமாட நீடு மருங்கொடு நெருங்கியெங்கும்
     அல்லிவண்டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே."  (சுந்தரர்)

     “விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் (று)
     இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
     கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
     அழித்தனர் ஆரூர் அரநெறியாரே."           (அப்பர்)

     “அம்மானே ஆகமசீலர்க்கு அருள் நல்கும்
     பெம்மானே பேரருளாளன்பிட வூரன்
     தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
     அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே."         (சுந்தரர்)

               
        வன்மீகநாதர்

     பூமேவு திருமடந்தை பொன்முகத்தா மரைமலரப் புவிவிளங்க,
     நாமேவு சுருதியிசை முனிஞிமிறு ஞானமண நனியுண் டார்ப்பக்,
     காமேவு தமனியநாட் டமரர்மனக் கவலையிருட் கங்குல் நீங்கத்,
     தேமேவு பொழிலாரூர்ப் புற்றிங்கொண் டெழுசுடரைச் சிந்தை
                                              செய்வாம்.

        
               தியாகராசர்
     கார்பொருவும் கருங்கூந்தல் செவ்வாய் வெண்ணகைப் பச்சைக்
                                           கன்னியோடும்,
     தார்கமழ்பூங் காந்தளந்தோட் குமரனொடு மணிச்சிங்கா தனத்து
                                            மேவிச்,
     சீர்பரவு வான் புலவர் நினைந்தனயா வையும் நல்கிச் சிறப்பின்
                                            வைகும்,
     வார்புனல்சூழ் வயற்கமலைத் தேவர்கள்சிந் தாமணியை மனத்துள்
                                            வைப்பாம்.