பக்கம் எண் :

648 திருமுறைத்தலங்கள்


     “மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரைநுதல்கரம்
     ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
     அத்தகவடி தொழ அருள்பெறுகண்ணொடும் உமையவள்
     வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.”  (சம்பந்தர்)

                                    “ -திண்மைக்
     களமர் மகிழக் கடைசியர் பாடும்
     விளமர் கொளும் எம் விருப்பே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
     விளமல் & அஞ்சல்
     (வழி) திருவாரூர் (வடக்கு) S.O. 610 002.
     திருவாரூர் மாவட்டம்.

208/91. கரவீரம்

கரையபுரம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் கரையபுரம் என்று வழங்குகின்றனர்.

     (1) திருவாரூர் - கும்பகோணம் சாலையில் ‘வடகண்டம்’ என்னும்
ஊரையடுத்து ‘கரையபுரம்’ என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலை
யடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். வெட்டாற்றின்
கரையிலுள்ளது.

     கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால்
இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. கௌதமர் பூசித்ததலம்.
திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயில்.

     இறைவன் - கரவீரேஸ்வரர்
     இறைவி - பிரத்யக்ஷமின்னம்மை
     தலமரம் - அலரி
     தீர்த்தம் - அனவரத தீர்த்தம்.