பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 649


     சம்பந்தர் பாடல் பெற்றது.

     சிறிய ஊர் - கோயில் பெரியது. கிழக்கு நோக்கி உயர்ந்த
விமானங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. எதிரில் தீர்த்தம். கோபுர
வாயிலைக் கடந்ததும் நந்தி, பலிபீடங்கள். அம்பாள் சந்நிதி (திருமணக்
கோலத்தில்) வலப்பால் உள்ளது. சுவாமி அம்பாள் கோயில்களைச் சேர்த்த
பெரிய பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன்,
பைரவர் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் திருமேனி பெரியது. சுவாமி
கம்பீரமாகக் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு,
பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

    
 “தங்குமோ வினை தாழ்சடை மேலவன்     
      திங்களோடுடன் சூடிய     
      கங்கையான் திகழுங் கரவீரத்தெம்     
      சங்கரன் கழல் சாரவே.”           (சம்பந்தர்)

                                   - வளமை
     எருக்கரவீரஞ் சேர் எழில் வேணி கொண்டு
     திருக்கரவீரஞ் சேர்சிறப்பே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கரவீரேஸ்வரர் திருக்கோயில்
     கரையபுரம்.
     மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்
     திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 610 104

209/92. பெருவேளூர்

மணக்கால் ஐயம்பேட்டை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணம் - குடவாசல், திருவாரூர்ப் பேருந்துச் சாலையில்,
மணக்கால் என்ற இடத்தில் இறங்கி, இடப்புறமாக 1/2 கி.மீ. சாலையில்
சென்றால் கோயிலை அடையலாம். பழைய நூல்களில் இத்தலம் ‘காட்டூர்
ஐயம்பேட்டை’ என்று குறிக்கப்பட்டுள்ளது.