கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி - அமர்ந்த நிலை - வீராசனம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகிய தரிசனம். இத்தலத்தில் சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தலபுராணம் உள்ளது. மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம் சிறப்பிலார் மதில்எய்தசிலை வல்லார் ஒருகணையால் இறப்பிலார் பிணியில்லார் தமக்குஎன்றும் கேடிலார் பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. (சம்பந்தர்) “விரிவிலா அறிவினார்கள் வேறோரு சமயஞ்செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் பரிவினாற் பேரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே.” (அப்பர்) “ஏகன் அநேகன்என விளங்கி எங்குந் தமதுதிருவுருவாம் யோக ஞானநிஷ்கள உருஅருவன் சகல வடிவமதாய் பாகம் பிரியாதருள் பெற்ற பாவைமகிழப் பெருவேளூர் நாகமதன்மேற் பிரியா நாதன் திருத்தாள் வணங்குவாம்.” (தலபுராணம்) “-உருக்க வருவேளூர்மாவெல்லா மாவேறுஞ்சோலைப் பெருவேளூர் இன்பப் பெருக்கே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் மணக்கால் ஐயம்பேட்டை & அஞ்சல் (வழி) திருவாரூர் - 610 104. குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம். |