- கருமை மிலையாலங்காடு மிடற்றாய் என்றேத்தும் தலையாலங் காட்டுத் தகவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. நடனேஸ்வரர் / ஆடவல்லநாதர் திருக்கோயில் தலையாலங்காடு செம்பங்குடி அஞ்சல் - 612 603 குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 211/94. குடவாயில். குடவாசல். | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் குடவாசல் என்று வழங்குகின்றது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து வருவதற்குப் பேருந்துகள் உள்ளன. ஊர் - குடவாயில். கோயில் - குடவாயிற் கோட்டம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றது. உலகப் பிரளய காலத்தில் இறைவன், உயிர்கள் அனைத்தையும் அமிர்தகுடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் (முகத்தில்) சிவலிங்கமாக இருந்து காத்தார். (அமிர்ததுளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று ; அமுதநீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தமாயிற்று. உயிர்களைக் காத்தமையால் கோ- நசர் = கோணேசர் ஆயினார்.) காலம் செல்லச் செல்ல குடத்தின் வாயிலில் லிங்கத்தின்மீது புற்று மூடியது. புற்றால் மூடியிருந்த அமிர்த குடத்தைக் கருடன் தன் மூக்கினால் பிளந்து வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு வன்மீகாசலேசர், கருடாத்ரி எனப் பெயர்கள் வழங்கலாயின. |