பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 675


     எதிர்த் தூணில் கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நவராத்திரி, சஷ்டி,
பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன.

     கல்வெட்டில் இத்தலம் “சுத்தமலி வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து
வெண்ணி” என்று குறிக்கப் பெறுகின்றது. இராசராசன் குலோத்துங்கன் (சோழர்)
காலக் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு 1196ஆம்
ஆண்டைச் சேர்ந்ததாதலின், இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சிறப்பு
வாய்ந்திருந்தது என்று அறிகின்றோம்.

     
“சடையானைச் சந்திரனோடு செங்கண் அரா
     உடையானை உடை தலையிற் பலி கொண்டூரும்
     விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
     உடையானை அல்லது உள்காது எனதுள்ளமே.”     (சம்பந்தர்)

     “முத்தினை பவளத்தை முளைத்த எம்
     தொத்தினைச் சுடரை சுடர் போல் ஒளிப்
     பித்தனைக் கொலு நஞ்சினை வானவர்
     நித்தனை நெருநற் கண்ட வெண்ணியே."           (அப்பர்)


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. வெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில்
     கோயில் வெண்ணி & அஞ்சல்
     நீடாமங்கலம் வட்டம்.
     திருவாரூர் மாவட்டம் 614 403.

220/103. பூவனூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     வெண்ணாற்றின் தென்கரையில் உள்ள ஊர்.

     (1) திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப்
பூவனூர் நிறுத்தத்தில் (Stop) இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம்
சென்றால் கோயிலை அடையலாம். ஆற்றைக் கடப்பதற்குப்