பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 677


     (2) மன்னார்குடி - அம்மாப்பேட்டை, வலங்கைமான் - மன்னார்குடி
நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன. இவற்றில் வந்து
பூவனூர் நிறுத்தத்தில் இறங்கிக் கோயிலை அடையலாம்.

     சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம். கோயிலின்
எதிரில் பெரிய குளம் உள்ளது. இதற்கு ‘க்ஷீரபுஷ்கரணி’ என்று பெயர்.
மற்றொரு தீர்த்தமாகிய ‘கிருஷ்ண குஷ்டஹரம்’ (கருங்குஷ்டம் போக்கும்
குளம்) கோயிலின் பின்னால் உள்ளது. இவையிரண்டும் பிணிதீர்க்கும்
சிறப்புடையன.

     இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு,
எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை
வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர். கோயிலின் மாட வீதிகளின் கோடியில்
நாற்புறமும் விநாயகர் கோயில் உள்ளது. ஊர் இரு பகுதிகளாக உள்ளது.
கீழ்ப்பகுதியில் சிவாலயம் உள்ளது.

     இறைவன் - புஷ்பவன நாதர், சதுரங்க வல்லபநாதர்.
     இறைவி - கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.
     தலமரம் - பலா.
     தீர்த்தம் - க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்.

     (வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து
விளங்கிய அம்பாளை, சதுரங்கத்தில் வென்று, மணந்து கொண்டதால்
இறைவன் சதுரங்கவல்லப நாதர் என்னும் பெயர் பெற்றார்.)

     அப்பர் பாடல் பெற்றது.

     பழைமையான ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கூடியது - கிழக்கு
நோக்கியது. உள்ளே நுழைந்ததும் வலப்பால் அலுவலகம். முன்மண்டபத்தில்
இடப்பக்கம் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி சந்நிதி உள்ளது. அம்பிகை
சூலமேந்தி அமர்ந்த கோலம். செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால்
பலிபீடம் நந்தி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை.
அடுத்துள்ள மண்டபத்தில் வலப்பால் கற்பகவல்லி அம்பாள் சந்நிதி.
அடுத்துப் பள்ளியறை. பக்கத்தில் ராஜராஜேஸ்வரி அம்பாள் சந்நிதி. இரு
அம்பிகை சந்நிதிகளும் தெற்கு நோக்கியுள்ளன.

     உள்வாயில் நுழைந்து பிராகார வலம் வரும்போது பிரதான விநாயகர்
சந்நிதி, லட்சுமி நாராயணர் சந்நிதி, காசி விசுவநாதர் சந்நிதி முதலியவை
உள்ளன. தலமரம் பலா உள்ளது. எதிரில் வசுசேனன், அகத்தியர், ஐயனார்,
நால்வர், கோதண்டராமர், வள்ளி, மகாலட்சுமி,