தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மகாராஷ்டிர மன்னர்கள் இத்தலத்திற்குப் பல நிபந்தங்கள் அளித்துள்ள செய்திகள் கல்வெட்டுக்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன. இத்தலத்திற்குப் பக்கத்தில் இடும்பாவனமுள்ளது. “பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரி அதளாடை கொடிகொள் ஏற்றினர் மணிகிணன் எனவரு குரைகழல் சிலம் பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையும் கற்பகத்தைத்தம் முடிகொள் சாய்த்தடி விழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.” (சம்பந்தர்) - “தொல்லைப் படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும் கடிக்குளத்து அன்பர் களிப்பே” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. கற்பகநாத சுவாமி கோயில் கற்பகநாதர்குளம் & அஞ்சல் குன்னலூர். S.O. - 614 703 திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம் 227/110. தண்டலை நீள்நெறி தண்டலைச்சேரி, தண்டலச்சேரி | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் தற்போது ‘தண்டலைச் சேரி’ என்றும் ‘தண்டலச்சேரி’ என்றும் வழங்குகின்றனர். திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவு. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருவோர் கோயில் வாயிலில் இறங்கலாம். இத்தலத்திற்குப் பக்கத்தில் ‘மணலி’ புகைவண்டி நிலையம் உள்ளது. |