பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 695


     விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பெற்று, 7-11-1985ல் கும்பாபிஷேகம்
நடைபெற்றுள்ளது.

      ‘விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
     சுரும்புந் தும்பியுஞ் சூழசடை யார்க்கிடம்
     கரும்புஞ் செந்நெல்லுங் காய்கமுகின் வளம்
      நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே’     (சம்பந்தர்)

     “பரிவுறு சிந்தை அன்பர் பரம்பொருளாகி யுள்ள
     பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
     வரிவிடு விடேல் எனாமுன் வன்கழுத்தரிவாள் பூட்டி
     அரிதலால் ‘அரிவாட்டாயர்’ ஆயினார் தூய நாமம்”
                                           (பெரிய-புரா)

     “அல்லமரும் குழலாளை வரகுண பாண்
          டியராசர் அன்பால் ஈந்தார்
     கல்லை தனில் மென்றுமிழ்ந்த ஊண் அமுதைக்
          கண்ணப்பர் கனிவால் ஈந்தார்
     சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும்
          மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார்
     நல்லது கண்டாற் பெரியோர் நாயகனுக்(கு)
            என்(று) அதனை நல்குவாரே.”
               (படிக்காசுப் புலவர் - தண்டலையார் சதகம்)

                                  - “கடிக்குளத்தின்
     வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
      தண்டலைக்குள் நீணெறிச் சிந் தாமணியே.”       (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில்
     தண்டலைச்சேரி கிராமம்
     வேளூர் அஞ்சல் - 614 715.
     (வழி) திருத்துறைப்பூண்டி
     திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.