பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 697


     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருத்துறைப்பூண்டியிலிருந்தும் மன்னார்குடியிலிருந்தும் இத்தலத்திற்குப்
பேருந்து வசதி உள்ளது. இவற்றிற்கிடையில் இவ்வூர் உள்ளது. கோயில்
‘கொழுந்தீசர் ஆலயம்’ என்று வழங்குகிறது. அரம்பையும், ஐராவதமும்
வழிபட்ட தலம். ஐராவதம் வழிபட்டதால் இத்தலத்திற்கு ‘ஐராவதேச்சுரம்’
என்றும் பெயர் என்பதைப் புராணத்தால் அறிகிறோம். ஞானசம்பந்தர்
இத்தலத்துப் பெருமானைக் “கோட்டூர் நற்கொழுந்தே” என்று புகழ்ந்து
பாடுகின்றார். கீழ்க்கோட்டூர் சிவாலயம் (மணியம்பலம்) கருவூர்த்தேவரின்
திருவிசைப்பாப் பாடல்களைப் பெற்றது. மேலக்கோட்டூரில் உள்ள கோயிலே
பாடல் பெற்றது.

     இறைவன் - கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்.
     இறைவி - மதுரபாஷிணி, தேனார்மொழியாள், தேனாம்பாள்.
     தலமரம் - வன்னி
     தீர்த்தம் - அமுதகூபம் (சந்நிதிக்கு முன் உள்ள குளம்) முதலாக உள்ள ஒன்பது தீர்த்தங்கள்.

     (1) முள்ளியாறு. (2) சிவகங்கை (கோயிலின் பின்புறம் உள்ளது ஐராவதம்
உண்டாக்கியது.) (3) பிரமதீர்த்தம் (சிவகங்கையின் கிழக்கில் உள்ளது)
(4) இந்திரதீர்த்தம் (மேல வீதியிலுள்ள தேரடிக்குளம்.) (5) சிவ தீர்த்தம்
(தெற்கு வீதியில் உள்ளது) (6) விசுவகர்மதீர்த்தம் (வடக்கில் ஐயனார் குளம்
எனப்படுவது) (7) அரம்பை தீர்த்தம் (வழக்கில் கருப்புட்டியான் குளம்
எனப்படுவது) (8) மண்டைத் தீர்த்தம் (மேல, கீழ்க்கோட்டூர்களுக்கிடையில்
உள்ளது) சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

     இராச கோபுரமில்லை. மேற்கு நோக்கிய கோயில். கோயிலுக்கு
முன்னும் பின்னும் குளங்கள் உள்ளன. (தீர்த்தம் எனும் பெயரில் இவை
குறிக்கப் பட்டுள்ளன.) உள் நுழைந்ததும் கவசமிட்ட கொடி மரமும்,
பலிபீடமும் நந்தியும் உள்ளன. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.
பழைமையான கோபுரம். இடப்பால் நந்தவனம்.

    அடுத்துள்ள பிராகாரத்தில் சந்திரன், தேவியர் சூழ மகாவிஷ்ணு,
நால்வர், சுப்பிரமணியர், அகோர வீரபத்திரர் சந்நிதிகள் உள்ளன.
அடுத்துள்ள அரம்பையின் தவக்கோலம் தரிசிக்கத்தக்கது. ஒருகாலை மடித்து
மேற்புறமாகத் தூக்கியும், ஒருகையைத் தலைமேல் படிய வைத்தும் உள்ள
அரம்பையின் திருமேனி அமைப்பு அற்புதமானது. அடுத்து
உமாமகேஸ்வரரும், அற்புதமான அர்த்தநாரீசுவரரும் காட்சியளிக்கின்றனர்.
பிரதோஷமூர்த்தி மூலமூர்த்தியாக இருப்பது