அருள்மிகு நடுதறிநாதர் துதி நயந்திருக்கும் அன்பிற்காய் நடுதறியில் வந்தபிரான் பயனளிக்கும் பெருங்கருணை படர்ந்திடும் திருவடிகள் அயர்ந்திருக்கும் மருள்நீக்கி அகத்தடைப்பார் தமக்குநலம் உயர்ந்திருக்கும் என்பதன்றோ உலகேத்தும் உண்மையதே. அருள்மிகு மாதுமையாள் துதி பாண்டவ யாற்று மருங்கினிலே பாரோர்க் கெல்லாம் நெறிகாட்டி வேண்டுவ ஈந்தே மாதுமையாள் வீற்றினி திருந்து அருள்புரிவாள் காண்டகு மமுதாய்க் கலந்தேத்தும் காதலர் நெஞ்சுள் தனியொளியாய் தூண்டாச் சுடராய் நின்றிடுவாள் துலங்கும் அவளின் அடிபோற்றி. “கன்றாப்பூர் நின்ற தறி” நெஞ்சத்து மாசகற்றி நேர்மை வழிநடந்து கொஞ்சுதமிழ்ப் பாவிசைத்துப் போற்றிடுவாய் - அஞ்சாதே என்றுமுனைக் காத்தருளி ஏற்றமுறு வாழ்வருள்வான் கன்றாப்பூர் நின்ற தறி. - “வீறாகும் இன்றாப்பூர் வந்தொட்டிருந்த திவ்வூரென்னவுயர் கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. நடுதறியப்பர் திருக்கோயில் கோயில் கண்ணாப்பூர் & அஞ்சல் (வழி) வலிவலம், S.O. 610 207. திருவாரூர் வட்டம் - மாவட்டம். தலம் - 46 |