பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 797


     திரும்பாமல் சென்று கொண்டிருந்தது. துரை பின்தொடர்ந்து வேகமாகச்
சென்றார். அவர் அக்குழந்தையைச் சென்றடையும்முன் அக்குழந்தை
கோயிலுள் புகுந்து மறைந்துவிட்டது. அன்னை வேதாம்பிகை - வேதநாயகியே
குழந்தை வடிவில் வந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து திகைப்பும்
சொல்லொணா மகிழ்வும் கொண்டார். அம்பிகையைத் தரிசிக்க எண்ணினார்.
பிற மதத்தினர் ஆலயத்துள் புக அனுமதிக்கப்படுவதில்லை யாதலால்
அந்நெறியை மீற மனமின்றி, அம்பாள் சந்நிதிக்கு நேரே வெளிமதிலில்
துவாரம் செய்வித்து அதன் வழியே அம்பாளைக் கண்குளிரத் தரிசித்தார்.
அர்த்த ராத்திரியில் வெளியே வந்து தன் உயிர் காத்த அம்பிகைக்கு துரை
தன் நன்றிக் கடனாகப் பள்ளியறையில் வைப்பதற்குத் தந்தத்தாலான ஊஞ்சல்
ஒன்றைப் பரிசாக அளித்தார்.” இவ்வரலாறு “கொங்கு நாட்டுக் கோயில்கள்”
பற்றி அன்பர் திரு.சிவகளை மு.சுப்பையா அவர்கள் எழுதியுள்ள நூலில்
இடம் பெற்றுள்ளது.

     
“பந்தார் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறதேறி
     அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண் சாரல்
     வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
     செந்தேன் தெளியொளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே.”
                                                (சுந்தரர்)

       
                 திருப்புகழ்

     கலைமேவு ஞானப் பிரகாசக் - கடலாடி ஆசைக் கடலேறி
     பலமாய வாதிற் பிறழாதே - பதிஞான வாழ்வைத் தருவாயே
     மலைமேவு மாயக் குறமாதின் - மனமேவு வாலக்குமரேசா
     சிலைவேட சேவற்கொடியோனே - திருவாணிகூடற் பெருமாளே

                                    -“துஞ்சலெனும்
     இன்னலகற்ற இலங்கு பவானிக்கூடல்
     என்னு நணாவின் இடை இன்னிசையே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி.சங்கமேஸ்வரர் தேவஸ்தானம்
     பவானி - 638 301 - ஈரோடு மாவட்டம்.