பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 799


     கொங்கு நாட்டுத் தலம்.

     தற்போது திருச்செங்கோடு என்று வழங்கப்படுகின்றது. சேலம், ஈரோடு,
நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். (ஈரோட்டிலிருந்து
18 கி.மீ. நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ.)

     சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த
தலமாகும். மலைமீது கோயில் உள்ளது. மேலமாட வீதியிலிருந்து பார்த்தால்
இம்மலையே பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி
என்றும் பெயர்.

     “நாகாசல வேலவ” என்பது கந்தர் அநுபூதித் தொடர். அர்த்தநாரித்
தலம். மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்றும் பெயர்.
தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களுண்டு.

     இறைவன் - அர்த்தநாரீஸ்வர்
     இறைவி - பாகம்பிரியாள்,
              முருகன் - செங்கோட்டு வேலவர்
     தலமரம் - இலுப்பை

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     மலைமீதிருந்து பார்த்தால் காவிரி ஆறு தெரியும். கோயிலுக்குச் செல்ல
மலைமீது 1200 படிகள் ஏறவேண்டும். படிக்கட்டுக்களில் பாம்பு உருவங்கள்
உள்ளன. ஓரிடத்தில் நீளமான பாம்பு வடிவத்திலேயே (20 அடி நீளம்) ஏறும்
வழி அமைந்துள்ளது. ஏறிச் செல்லும்போது குரங்குகளின் தொல்லைகள்
உண்டு. வழியில் பல தீர்த்தங்களும் உள்ளன. இப்படிகளுள் 60 ஆம் படி
மிகச்சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால்
அது நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
இத்தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி,
கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன. மலையேறி

     ஐந்தடுக்குள்ள ராஜகோபுரம் கடந்து, கீழிறங்கி, இறைவன் சந்நிதிக்குச்
செல்லுமுன் செங்கோட்டுவேலவர் சந்நிதி அழகான நின்ற திருவுருவம்.
கிழக்கு நோக்கிய சந்நிதி. வலக்கையில் மேலே ஊன்றி இடக்கையை இடுப்பில்
ஊன்றியவாறு நிற்கின்ற நிலையைக் கண்டால் நிச்சயமாக அந்த அழகை
அனுபவிக்க ‘நாலாயிரம் கண்கள் தேவை.’ உணர்ந்த அநுபவித்த,
ஏக்கவெளிப்பாடே அருணகிரிநாதரின் வாக்கு என்பதை நேரில் அறியலாம்.
வெள்ளைப் பாஷணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி.