திருப்புகழ் இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி இடர்கள்பட்டலையப் புகுதாதே திருவருட்கருணைப் ப்ரபையாலே திரமெனக்கதியைப் பெறுவேனோ அரிய யற்கறிதற் கரியானே அடியவர்க்கெளியற் புதநேயா குருவெனச் சிவனுக் கருள்போதா கொடுமுடிக் குமரப் பெருமாளே. -“துன்னியருள் வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ் பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மகுடேஸ்வரர் தேவஸ்தானம் கொடுமுடி - 638 151. ஈரோடு மாவட்டம். கொங்கு நாட்டுத் தலம். திருச்சி - ஈரோடு பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தற்போது மக்கள் வழக்கில் ‘கரூர்’ என்றழைக்கப்படுகிறது. பெரிய ஊர் சென்னை, சேலம், திருச்சி, ஈரோடு முதலிய பல ஊர்களிலிருந்தும் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. ஊருக்குக் ‘கருவூர்’ என்றும் கோயிலுக்கு ‘ஆநிலை’ என்றும் பெயர். காமதேனு வழிபட்டதலம். இதனால், சுவாமிக்குப் பசுபதி என்ற பெயருண்டு. புகழ்ச்சோழ நாயனார் ஆண்டபதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதாரத் தலம். |