தீர்த்தம் - ஆம்பிரவதி (அமராவதி) நதி. சம்பந்தர் பாடிய தலம். மூலவர் சுயம்பு மூர்த்தி, சிறிது சாய்வாக உள்ளது. (கருவூராருக்காகச் சுவாமி சாய்ந்து கொடுத்தார் என்பது செவிவழிப் பெற்ற செய்தி) சோழர் காலத் திருப்பணி பெற்ற தலம். ஆவுடையார் சதுரமாக உள்ளது. கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ்ச் சோழ நாயனார் கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன்பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. புகழ்ச் சோழர் மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. விசாலமான கோயில். கருவூர்த் தேவர் சமாதிக்கோயில் தனியே உள்ளது. (கருவூர்ச்சித்தர் எனப்படுவர் வேறு) கோயிலுள் மூலவரைத் தரிசிக்கச் சேவார்த்திகள் செல்லும் நுழைவு வாயிலில் வலப்பக்கமுள்ள கல்தூண் ஒன்றில் - மத்தியில் சேவார்த்திகள் செல்லும் பக்கமாகவே கீழ்க்காணுமாறு சக்கரம் ஒன்று உள்ளது. இதன் பொருள் எவர்க்கும் தெரியவில்லை. விசாரித்ததில், இக்கோயில் அமைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய குறிப்பு அச்சகரம் என்கின்றனர். உண்மை விளங்கவில்லை. (இதைக் காண்போர் அப்பொருள் தெரிந்து வெளிப்படுத்துவாராயின் சமய உலகம் அவர்க்கு என்றும் நன்றியுடையதாகும்.) அச்சக்கரம் வருமாறு :- |