பக்கம் எண் :

840 திருமுறைத்தலங்கள்


     சூரியன் கோயில், களஞ்சிய அறை யாகசாலை உள்ளன. அடுத்து
திருஞானசம்பந்தமூர்த்தி, கேது, சந்தானாசாரியர்கள், திருமறைகள்,
சதுர்வேதங்கள், உற்சவமூர்த்தி களாய நால்வர், சேக்கிழார் சுவாமிகள்,
அறுபத்துமூவர், சுந்தரர் எழுந்துள்ள கோயில்களைக் கும்பிடலாம். அடுத்து
விநாயகப் பெருமான், சோமாஸ்கந்தர், விஷ்ணு, மகாலிங்கம், பஞ்சலிங்கங்கள்,
லட்சுமி முருகன் கோயில்கள் உள்ளன. இந்த வரிசையில் நடுநாயகமாக மிகப்
பெரியவராக எழுந்தருளியுள்ள மகாலிங்கப் பெருமானே பழைய
திருக்கேதீஸ்வரப் பெருமான். அவரை நிலத்திலிருந்து எடுத்தபோது
தற்செயலாக உண்டான ஒரு சிறுபழுது அவரை கர்ப்ப கிருகத்தில்
எழுந்தருளச் செய்வதற்கு தடையாகிவிடவே, பக்தர்கள் அவரை மேற்குப்
பிரகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். இன்றும் சிவராத்திரி வேளையில்
பல்லாயிரவர் ஆடிப்பாடிப் பாலாவியில் நீர்முகந்து வந்து தம் கையாலேயே
சாமந்தொறும் அபிஷேகம் செய்யும்போது வாயினால் “சிவாய நம ஓம், சிவாய
நமஓம்” என ஒரே குரலில் உச்சாடனம் செய்தல் உணர்ச்சி மயமானதாகும்.

     இனி உட்பிரபகாரத்தில் வடபாலமைந்த கோயில்களில் சுப்பிரமணியர்,
தேவசபை, சரபமூர்த்தி, நடராஜப் பெருமான் எழுந்துள்ளார்கள். அடுத்து
மேற்கு நோக்கியவாறு யாகசாலை, காலபைரவர் கோயில், சனீஸ்வரன்,
சந்திரன் ஆகியோர் கோயில்கள் உள்ளன. கோபுரத்தின் கீழ் இருபாலும்
அதிகார நந்திகள் எழுந்தருளியுள்ளார்கள். கொடிமரம் கம்பீரமானது நிருத்த
மண்டபம் என அமைந்த இடத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.

     கௌரியம்பாள் தெற்கு நோக்கி அழகாக எழுந்தருளியுள்ளார்.
கௌரியம்பாளின் திருப்பணி வேலைகளைச் செய்வதற்கு மலேசிய வாசிகளான
சைவத்தமிழபிமானிகள் துணிந்துள்ளார்கள். இன்றை திருக்கேதீஸ்வரப்
பொலிவுக்குத் தமிழ்நாட்டு ஆலயங்கள், ஆதீனங்கள், உபசரிப்பு
வரப்பிரசாதமாய் வந்து வாய்த்தவையாகும். இன்னும் யாழ்ப்பாணத்துப்
பெரியவரான விசுவப்பா அவர்கள் வேண்டிய போதெல்லாம் இலட்சக்
கணக்காக அள்ளிக் கொடுத்துள்ளார். திருக்கோயிலில் சரியைத் தொண்டு
செய்பவர்களுள் பொன்னாவெளி உடையார் அருளம்பலம். மன்னார் உதவி
அரசாங்க அதிபர் ஆறுமுகம், ஆசிரியர் பண்டிதர் கனகசபை முதலானோர்
குறிப்பிடத்தக்கவர்கள். திருக்கேதீஸ்வரநாதன் மீதும் பக்தர்கள் பல
பிரபந்தங்கள் பாடியுள்ளார்கள். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின்
மருகர் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை திருக்கேதீஸ்வரத்
தேவாரத் திருப்பதிகங்களுக்கு உரை எழுதியுள்ளார்.