பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 839


     இன்றைய திருக்கேதீச்சரம் கிழக்கு நோக்கிய எழில்மிகு
இராசகோபுரத்தோடு ஒளி வீசுகின்றது. கோபுரத்தோடு மருவினாற்போல
பெரிய மணிமண்டபமும் ஒய்யாரமாயெழுந்து ஒலிபரப்புகிறது. வாசலில் பெரிய
நந்தியெம் பெருமான் காவல் புரிகின்றார். அருகில் தெற்கு நோக்கியவாறு
மிகப்பெரிய அளவில் சிவசிவ மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தில்
முகப்பில் காரியாலயம், நீர்த்தொட்டி முதலியன அமைந்துள்ளன. அங்கே
அர்ச்சனைப் பொருள்கள், தேவஸ்தான வெளியீடுகள் பெறுவதற்கான வசதியும்
உள்ளன. இன்றைய வெளிப்பிராகாரம் பொன்னாச்சி மரங்களாலும் வேப்ப
மரங்களாலும் பொலிவு பெறுகிறது.

     கிழக்கு வீதியில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நாட்டுக்
கோட்டைச் செட்டியார் மடம், அம்மா மடம், பசுமடம், பூநகரியார் மடம்
முதலியன உள்ளன. தெற்கு வீதியில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பாலாவிப்
பெருங்குளம் பரவியுள்ளது. அதற்கு இப்பால் வேப்பஞ்சோலைச் சூழலில்
பாண்டியன் தாழ்வுச் சபாரத்தின சுவாமி மடம், சிவராத்திரி மடம், நெசவு
மடம், சிற்பிகள் தங்கும் மடம் முதலியன உள்ளன. மேற்குவீதியை
அலங்கரிக்கும் மடங்களுள் மடாலயத்தோடும், அன்னதான மண்டபத்தோடும்
கூடிய குருகுல மடம் முதலியன உள்ளன. வடக்கு வீதியில் நாவலர் மடம்,
விசுவகன்மா மடம், திருக்குறிப்புத் தொண்டர்மடம் முதலியவற்றோடு, சிவமணி
எனப் புகழ் பெற்ற தொண்டர் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களின்
குடில், திருக்கேதீஸ்வரப் பெருமானிடம் தம்மை ஒப்படைத்துத் தினமும்
திருத்தொண்டு செய்து வருகின்ற செல்வர் முன்னாள் பொன்னாவெளி
உடையார் அருளம்பலம் அவர்களின் சிற்றில் முதலியனவும் உள்ளன.
திருக்கோயிலுக்கு அண்மையில் தபாற்கந்தோர், மருந்துச்சாலை, கடைகள்,
உண்டிச்சாலி, சைவப் பாடசாலைகள் யாவும் உள்ளன. மடங்களை எல்லாம்
சுற்றியவாறு உலாவருவதற்கான தேரோடும் பெரும்பிராகாரம்
அமையவிருக்கிறது. இன்று அங்கே ஐந்து பெரிய தேர்கள் உருவாகியுள்ளன.
இவற்றுள் சிவன் தேர் பெரியதாகும். சுவாமி கிழக்கு நோக்கி
எழுந்தருளியுள்ளார். கௌரியம்மன் தெற்கு நோக்கியுள்ளார். சுவாமி வாசலில்
இராசகோபுரத்தின் இருமருங்கிலும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
வெளியில் காவல் காத்தவாறு சிவனை நோக்கியிருப்பவர் பழைய
நந்தியெம்பெருமானாவர்.

     உத்தரவு பெற்று உள்ளே சென்று உட்பிராகாரத்தை வலஞ்செய்யும்
போது, இறைவனை நோக்கியவாறு எழுந்தருளியுள்ள