பக்கம் எண் :

842 திருமுறைத்தலங்கள்


     தீர்த்தம் - புண்ணியகோடி தீர்த்தம்.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     சிறிய கோயில் கோபுர வாயிலைக் கடந்து சென்றால் நந்தி, பலிபீடம்
உள்ளன.

     பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர்,
சந்திரன், சூரியன் சந்நிதிகள் உள்ளன. தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது.

     கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி,
லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் முறையாகவுள்ளன.
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு
நோக்கியுள்ளது.

    
 “மறியார் கரத்தெந்தையம் மாதுமையோடும்
     பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
     பொறிவாய் வரிவண்டு தன் பூம்பெடை புல்கி
     வெறியார் மலரில் துயிலும்விடைவாயே.”           (சம்பந்தர்)


     இப்பதிகம், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் பன்னிரு திருமுறைப்
பதிப்பு நிதியிலிருந்து 1968ல் ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ குமரகுருபரன் சங்கம்
மூலமாக வெளியிடப்பட்டுள்ள மூவர் தேவாரம் தலமுறை, (அடங்கன் முறை)
நூலில் 1536ஆம் பக்கத்தில் புதிய பதிகம் என்று தலைப்பிட்டுச் சேர்க்கப்
பட்டுள்ளது.

அஞ்சல் முகவரி:-

     
அ/மி. விடைவாயப்பர் / புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில்.
     திருவிடைவாயில் - கூத்தா நல்லூர் Post
     தஞ்சை மாவட்டம் - 614 101.
 

276. திருக்கிளியன்னவூர்

     இத்தலம் 276ஆவது திருமுறைத்தலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி (பாண்டிச்சேரி)யிலுள்ள இந்தாலஜி இன்ஸ்டியூட்டினர் (The
Institute of Indology) 1984 ல் வெளியிட்டுள்ள தேவாரம் (பண்முறை) -
ஞானசம்பந்தர் தேவாரம் வால்யூம் 1ல் பக்கம்