பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 843


405ல் (பதிகத்தொடர் எண்.385 உடையதாக) - ‘திருவிடைவாய்’ பதிகத்தை
அடுத்து,

     “திருக்கிளியன்னவூர்” என்னும் தலத்தின் பதிகத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் “சித்தாந்தம்” இதழ் மலர் 5, இதழ் 11. (1932) தலைப்பு ஏட்டிலிருந்து
எழுதப்பட்டது என்று குறித்துள்ளனர். இப்பதிகப்பண் ‘கௌசிகம்’. இந்நூலின்
பதிப்பாசிரியர்கள் T.V. கோபால ஐயர் அவர்களும், திரு. Francois Gros
அவர்களும் ஆவர். திரு. T.V. கோபாலய்யர் அவர்கள் இந்நூலில்
முன்னுரையில் (பக்கம் XXXVIII-XXXIX) “கிளியன்னவூர் பதிகம் பி.ஜானகிராம்
முதலியார் அவர்களிடம் பெற்று, “சித்தாந்தம் மலர் 5 இதழ் 11 (1932)ல்
வெளியிடப்பட்டுள்ளதாகக் குறித்துள்ளார்.

     (மேற்படி நூலில் இத்தலம் எங்குள்ளது என்று குறிப்பிடப்படவில்லை.
ஆனால் திண்டிவனத்திற்குப் பக்கத்தில் ‘கிளியனூர்’ என்றும் பெயரில்
 இன்றொரு ஊர் உள்ளது.

     இப்பதிகம் வருமாறு:-

            
 திருக்கிளியன்னவூர் - கௌசிகம்

    
 1. தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
      சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவொர்
       பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை
       ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே.

     2. வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
     தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
       புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே
       நன்மை உற்ற கிளியன்ன வூரனே.

     3. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
      உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
       மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
       முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.

     4. அன்பர் வேண்டுமவை அளி சோதியான்
      வன்பர் நெஞ்சில் மருவல் இல்லாமுதல்
       துன்பம் தீர்த்துச் சுகம் கொடு கண்ணுதல்
       இன்பம் தேக்கும் கிளியன்ன வூரனே.