பக்கம் எண் :

844 திருமுறைத்தலங்கள்


   5. செய்யும் வண்ணம் சிரித்துப் புரம்மிசை
     பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
     உய்யும் வண்ணம் இங்கு உன் அருள்நோக்கிட
     மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.

   6. எண்பெறா வினைக்கு ஏதுசெய் நின் அருள்
     நண்பு உருப்பவம் இயற்றிடில் அந்நெறி
     மண்பொரு முழுச் செல்வமும் மல்குமால்
     புண் பொருத கிளியன்ன வூரனே.

   7. மூவர் ஆயினும் - முக்கண்ண - நின்அருள்
     மேவுறாது விலக்கிடற் பாலரோ
     தாஉறாது உனது ஐந்தெழுத்து உன்னிட
     தேவர் ஆக்கம் கிளியன்ன வூரனே.

   8. திரம் மிகுந்த சடைமுடியான் வரை
     உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
     நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
     வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.

   9. நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
     பேதம் உற்றுப் பிரிந்து அழலாய் நிமிர்
     நாதன் உற்றன நல்மலர் பாய் இருக்
     கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.

  10. மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
     “பொங்கு அழல் சுரம் போக்கு” என, பூழியன்
     சங்கை மாற்றி சமணரைத் தாழ்த்தவும்
     இங்கு உரைத்த கிளியன்ன வூரனே.

  11. நிறை வாழ் கிளியன்னவூர் ஈசனை
     உறையும் ஞானசம்பந்தன் சொல்சீரினை
     அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
     குறை இலாது கொடுமை தவிர்வரே.


     (நூலில் இப்பாடல்கள் படிப்பதற்கு ஏற்ப இவ்வாறு பிரித்துப்
போடப்பட்டுள்ளன.)