வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய். போற்றி அருளுக நின்ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகதின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம்மார்கழி நீராடேலோர் எம்பாவாய். விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். (திருவாசகம்)
தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது. பாடல் ‘பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன்நாமங்கள் பேசுவார்க்கு இணக்கிலாததோர் இன்பமே வரும்துன்பமே துடைத்து எம்பிரான் உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒத்தபின் கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.’ (திருவாசகம்) |