பக்கம் எண் :

878 திருமுறைத்தலங்கள்


                      (10) திருப்புகழ்

     வெற்பன வேயெழுந்து செப்பன வேதிரண்டு
          மெத்தென மோடிகொண்ட தனமாதர்
     மெய்ப்படு கோலமுங்கண் மைப்படு சாலமுஞ்செய்
          வித்தையு மேநினைந்து மயலாகி
     அற்பக லாவலைந்து கற்பதெலாமுலைந்து
     ளற்பமு மானமின்றி அழிவேனோ !
     அக்கினி ரூபமைந்த கிர்த்திகை மாதர்தந்த
          அற்புத பாலையுண்ட குமரேசா !
     பொற்பதி காவலிந்தி ரற்குற வேலெறிந்து
          பொய்ப்படு சூர்பிளந்த அதிதீரா !
     புட்பதி யேறுகொண்டல் அச்சுத னார்மகிழ்ந்த
          புத்தமிர் தானசெஞ்சொல் மருகோனே !
     உற்பல மோகொடுங்க ணைக்கினை யோவெனுங்கண்
          உத்தம தேவதந்தி புணர்மார்பா !
     உத்தம மாவளங்கொள் உத்தரகோசமங்கை
          உற்றினி தாவிருந்த பெருமாளே !

அஞ்சல் முகவரி :-

     அ/மி. மங்களேசுவரர் திருக்கோயில்
     உத்தரகோசமங்கை & Post
     இராமநாதபுரம் வட்டம் - மாவட்டம் - 623 533.


4. திருவண்ணாமலை

     தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.

                         பாடல்கள்

     
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
     சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
     மாதே வளருதியோ வான்செவியோ நின்செவிதான்
     மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்