(5) திருத்தசாங்கம் “தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற்கொண்டாடும் உத்தர கோச மங்கையூர்.” திருவுத்தரகோசமங்கைத் தலபுராணப் பாடல்கள் (6) ஆதிசிதம்பர சபா நடேசர் பூமேவுமடற்கமலப் பொகுட்டுறையும் மந்தணனும் பொலிவினோங்கித் தேமேவுபசுந்துவளத் திருமாலுங்காண்பரிய செல்வரேனும் பாமேவுபதஞ்சலியும் புலிப்பதனுங்கண்டுதினம் பணிந்துபோற்ற மாமேவுமணிமன்று ணடம்புரிபொற்பதமிறைஞ்சி வழுத்தல் செய்வாம் (7) சிவகாமசுந்தரி உலகமுழுதும் பயந்துங் கன்னிமைநீங்கா திறைபாலு வந்துவைகி யலகிலுயிர்க்கருள்சுரந்து பேரறமெண்ணான் கியற்றி யனைத்துங்காக்குந் திலகநுதற் செங்கனிவாய் சிவகாமசுந்தரியாந் தேனைச்செம் பொன் மலையரையன் குலவிளக்கை யிருள் தீரவெமதகத்துள் வைத்துவாழ்வோம். (8) மங்களநாதர் ஒருபொருளாய் பலவுருவா யொளியாகி யானந்தவுண்மை யாகிக் கருதரிதாய்த்தெரிவரிதாய்க் காரணகாரியங்கடந்த கருணை யாகிப் பொருளின் மறைக்கொழுந்தாகி யுபநிடதப்பொருளாகிப் புவனிபோற்ற வருதிருவுத்தரகோசமங்கையர னடிக்கமலம் வணங்கல் செய்வாம். (9) மங்களநாயகி காரேறு கருங்குழலுந் திருநுதலுஞ்சுடரிலைவேற் கண்ணுங் கஞ்சத் தாரேறுதிருமா புங் கரும்புருவந்தடந்தோளுங் கருணைகாட்டி நீரேறுசடாமவுலிப் பெருமான்றனொருபாக நீங்காதோங்கு வாரேறுபண்முலையாண் மலர்ப்பதமுமெந்நாளும் வழுத்தல் செய்வாம். |